Wednesday, September 9, 2009

தியானமுறைகள்(osho)

தியானம் ஒரு கிளர்சியுட்டும் அனுபவம் .அதுவரை அறிந்திராத ஒன்று குறித்த அனுபவம் .மனித மனம் மேற் கொள்ளும் மகத்தான அனுபவம் .தியானத்தில் அப்படியே இருக்கிறிர்கள் எதையும் செய்யாமல் செயலில்லை ,சிந்தனை இல்லை ,உணர்ச்சி இல்லை ,அது ஒரு முழுமையான உவகை நிலை .நீங்கள் எதையும் செய்யாமல் இருக்கும் போது இந்த உவகை எங்கே இருந்து வந்தது ?அது எங்கும் இன்றி வரலாம் ,எங்கு இருந்தும் வரலாம் .அது வினை முதலற்றது .மகிழ்ச்சியால் நிரம்பி இருப்பது .
தியானத்தின் எந்த நிலையிலும் நீங்கள் உடல்சார்ந்த விதத்தில்லோ மனம் சார்ந்த விதத்தில்லோ எதையும் செய்வது இல்லை .எவ்வித நிகழ்வும் இன்றி அனைத்து செய்கையும் நின்றுவிட நீங்கள் சும்மா இருக்கிறீர்கள்.அது நீங்கள் செய்யக் கூடியதும் அல்ல .பயிற்சி பெறக் கூடியதும் அல்ல .அதன் இயல்பை அறிந்துக் கொள்ளுகிறிர்கள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இருக்கிற படியே இருங்கள் ஆழ்ந்து சிந்திப்பதும் ,ஒரு முனைப் படுத்துவதும் ,எண்ணமிடுவதும் ஒரு வேலையே ! நீங்கள் எதையும் செய்யாமல் முற்றிலும் ஓய்வாக ஒரே ஒரு கணம் உங்கள் மையத்தில் இருக்க முடிந்தால் அது தியானம் .அந்தத் திறமையை நீங்கள் பெற்ற பிறகு ,உங்களுக்கு விருப்பம் உள்ள வரை அதே நிலையில் தங்கி இருக்க முடியும் .நிறைவாக இருபத்தி நான்கு மணி நேரமமும் அதே நிலையில் உங்களால் இருக்க முடியும்.
உங்களுடைய அமைதி குலையாமல் இருக்க முடிகிற போது, நீங்கள் நிதானமாய் செயல்படத் தொடங்கலாம் .உங்கள் இருப்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகைகள் கவனமாக இருங்கள் ,அதுவே தியானத்தின் இரண்டாவது பகுதி .முதலில் ஓய்வாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் ,அடுத்து தரையை சுத்தம் செய்வது ,நிரில் குளிப்பது போன்ற சின்ன சின்ன செயல்களை உணர்வுடன் கவனமாக செய்யுங்கள்.

பிறகு சிக்கலான செயல்களை உங்களால் எளிதாக செய்ய இயலும் . உதரணமாக நான் உங்களுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் என்னுடைய தியான நிலைக்கு இடையுறு ஏற்பட்டு விடவில்லை .நான் பேசிக்கொண்டே இருந்தாலும் என்னுடைய மையத்தில்(center) எந்தஒரு அலையும் எழும்பாது அது முழுவதும் நிசப்தமாய் இருக்கும் .

ஆகவே தியானம் செயலுக்கு மாறானது அல்ல .அது வாழ்வில் இருந்து விலகி செல்வதும் ஆகாது. ஒரு புதிய வாழ்க்கைமுறையை அது உங்களுக்குப் போதிக்கிறது. நீங்கள் சுழல்காற்றின் மையமாக இருக்கிறிகள் .

தியானத்தின் முழுமையான ரகசியமே நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாக பார்பதுதான் .செய்கை தன்னுடைய தளத்தில் தொடர்கிறது ,எவ்வித பிரச்னையும் இல்லாமல் மரத்தை வெட்டுவது ,கிணற்றில் நீர் இறைப்பது என்று தொடர்கிறது ,நீங்கள் சிறியதும் பெரியதுமாய் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் .ஆனால் மையத்தில் இருந்து மட்டும் வழி தவறிவிட வேண்டாம் . உங்கள் விழிப்புணர்வும் ,கவனித்தலும் (விருப்பு ,வெறுபற்ற) சிதைந்து விடாமல் அப்படியே இருக்க வேண்டும் .


ஆனந்தமயகோசம்

கை கூப்பி வணங்குவது நம் நாட்டின் பண்பாடு. பாரத நாட்டில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகுவித்து வணங்குகின்றனர்.

கோயில்களில் ஆண், பெண் வணங்கும் முறையில் வேறுபாடுகள் உண்டு. பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வர். இல்லையெனில் இரு கைகளையும் குவித்து வணங்குவர். ஆண்கள் தலைமேல் கைகுவித்து வணங்கும் பழக்கம் நம் நாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பழக்கம்.

உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் பஞ்ச பூதங்களின் கலப்பால் ஆனது. அளவுகள் வேறுபடலாம். அதை பஞ்சகோசங்கள் என்று கூறுவர். 5 விரல்கள் 5 கோசங்களை காட்டுகிறது. மனிதன் உருவாக காரணமாக உள்ள 5 கோசங்களாக அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன.

மனித உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். எனவேதான் "உண்டிதற்றே உணவின் பிண்டம்" என்பார்கள். உண்ணும் உணவு மனிதனின் உடம்பை மட்டுமல்ல நம் சிந்தனையையும் நிச்சயிக்கிறது.

காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது. இது பிராணமய கோசம். அதை எப்படி சுவாசிப்பது அதனால் எந்த வகையான ஆற்றலை பெறுவது என யோக நூல்கள் சொல்கின்றன.

மூன்றாவது மனோமய கோசம். மன எண்ணங்களால் உருவாவது. தர்மசாஸ்திரம் 'மனநலனுக்கு' முக்கியத்துவம் தருகிறது. மனிதன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகிறான் என்கிறது நூல்கள். விஞ்ஞானமும் இதைதான் கூறுகிறது.

புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம். எண்ணில்லாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதே புத்தியாகும்.

இந்த கோசங்களால் மனிதன் பெறும் மாறாத மகிழ்ச்சி - நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.

மனிதனுக்கு மனிதன் 5 கோசங்களில் மாறுபடலாம். ஆனால் எல்லோரிடமும் உள்ளது 'ஆத்மா' என்ற ஒன்றுதான் என்பதைதான் கைகுவித்து உணர்த்துகிறார்கள். ஒரு கை தன் 5 கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது 5 கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா ஒன்றே என்று காட்டுகிறது. இறைவன் முன்னிலையில் இந்த உண்மையை பக்திப்பூர்வமாக ஒப்புக்கொண்டு உணர்ந்து செயல்படுவேன் என்று உணர்த்தவே கைகுவித்து வணங்குகிறார்கள்.

செய்வினை

செய்வினை என்பதும் நல்வினை என்பதும் ஆற்றல் களத்தில்(energy Field) ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களே...


செய்வினை செய்யக்கூடிய வல்லமை படைத்த மனிதன் தன்னுடைய மன ஆற்றல்களை அதிகப்படுத்திக் கொள்கின்றான். மன ஆற்றலை(Mind Energy) ஒரு குறிப்பிட்ட பொருளின்மீது குவித்து நொகை ஆற்றலாக(Negative Energy) மாற்றுகின்றான்.


மனிதனைச் சுற்றி 5 கோசங்கள் உள்ளன.


அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்


இதில் அன்னமய கோசமே மனிதனின் உடலுக்கு அருகே (ஏறக்குறைய நல்ல உடல் மன ஆரோக்கியம் கொண்டவர்களுக்கு 3 அடி வரை இருக்கும்.) உடலிலிருந்து வெளிப்புறத்தை நோக்கி எல்லா திசையை நோக்கியும் 3 அடி நீளம் வரை இருக்கும். இதை Aura என்றும் சொல்வார்கள். (விவேகானந்தரின் தலைக்குப் பின்னால் இருக்கும் ஒளிவட்டமே...!) இதனை 'Crealean' ஒளிக்கூடு(camera) மூலம் படம் பிடிக்க முடிகின்றது.

நோய் முதலில் இந்த சுற்றில்தான் ஆரம்பிக்கின்றது. அன்னமயகோசவில் துளை ஏற்படும்பொழுது சீவகாந்தமானது ஒழுகிக்கொண்டேயிருக்கின்றது. அது உடலில் மின் குறுக்கு ஏற்படுத்துகின்றது. இதனால் வலி உண்டாகின்றது... நீடித்த வலி உடலில் நோயாகப் பரிணமிக்கின்றது. இயற்கையே அந்தத் துளையினை அடைக்கும் பணியினை மேற்கொள்கின்றது. இயற்கையினால் முடியாதபொழுது சீவகாந்தத்தினை நாம் வேதியம்(chemical) மூலம் சமன் செய்யவேண்டியுள்ளது.

செய்வினையும் இப்படித்தான் வேலை செய்கின்றது. யார் மீது செய்வினை செய்யவேண்டுமோ அந்த நபரின் அன்னமய கோசத்துடன் தொடர்பு கொண்ட ஏதாவது ஒரு பொருளை(object) எடுத்துக்கொள்வார்கள்...

உதாரணமாக அந்த நபர் அணிந்த ஆடையின் ஒரு சிறு துண்டுப்பகுதி கூட போதும்; அல்லது நகம்; முடி; ஒரு பிடி கால் மண்... இப்படி அவருடன் தொடர்பு கொண்ட ஒரு பொருள்.

அதன்பின் 48 நாட்களுக்கு மிகவும் கடுமையான நியமங்களினை மேற்கொண்டு அந்த கருப்பு மந்திரவாதி(Black Magician) 'காச்மோரா' மந்திரத்தினைப் பாவிப்பார். இது மிகவும் வலிமைவாய்ந்த ஒரு மந்திரம். எதிரியை ஒழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டவர்கள் பாவிப்பது. எங்காவது பிழை ஏற்படினும் அந்த மந்திரவாதி காலி...! (உதாரணமாக அந்த 48 நாளும் அந்த மந்திரவாதி தன் ரத்தத்தினைப் பார்த்தல் கூடாது...நடு சாமம் கண்டிப்பாக பூசை...இப்படி அதிக நியமங்கள் உள்ளன... இது ஒரிசாவில் மிகவும் பிரபலம்...)

அந்த 48 நாட்களிலும் அன்னமய கோசத்தினை மெதுமெதுவே துளை செய்யப்படும். சில மந்திரவாதிகள் பொம்மை செய்து அதை ஊசியால்குத்தும் பொழுது இங்கே நமக்கும் அதே வலி உண்டாகும். மருத்துவ அறிவியலால் கண்டுபிடிக்க இயலாது. ஒரு சமயம் எல்லாம் சரியாக இருப்பதாக மருத்துவ பரிசோதனைகள் காட்டும்; அடுத்த நிமிடம் அப்படியே விந்தையான முடிவு(Abnormal result) வரும். மனோதத்துவ நிபுணர்கள் இதை வேறு வேறு பெயர்களை இட்டு குணப்படுத்த முயல்வார்கள்.

அதில் கருத்தேற்றம் செய்யும் முறை தினமும் மேற்கொள்ளப்படும் . மயக்கவுறக்க(hypnosis) முறை... இதுவும் அவ்வளவாகப் பலனளிப்பதில்லை...

தொடர் சீவகாந்த இழப்பினால் சொல்லொணாத் துயரங்கள் ஏற்படும். முதலில் உடல்நலம் பாதிக்கப்படும். பின்னர் மன நலம் பாதிக்கப்படும். இதனால் பொருள் வளம் பறிபோகும். இதனால் கவலையும் மன அழுத்தமும் வந்து சேரும். குடும்பத்தில் அனைவரும் ஒரு வித இறுக்கமான மனோ உணர்வினில் ஆழ்ந்திருப்பர். கவர்ச்சி நியதியின்படி(According to Law of Attraction) அவர்கள் தங்களை அறியாமலேயே தங்களது மனதினில் நொகைகளை(Negatives) வளர்த்துக் கொண்டிருப்பர்.

அவர்களே இப்பொழுது நம்பிக்கை இன்றி வாழ்வின் கடைசிக் கட்டத்தினை
எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர்....

மருத்துவம் பலனின்றி வெகுவிரைவிலேயே இன்ன காரணமென்றும்
கண்டுபிடிக்கப்படமுடியாமலேயே வாழ்வும் ஒரு முடிவிற்கு வந்துவிடுகின்றது....

Tuesday, September 1, 2009

புத்தர் தியானம் கதை

உலகப் பற்றுடையவர்கள்



போதிவனத்தில் தியானத்திலிருந்த புத்தரைத் தரிசிப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவன் காத்திருந்தான்.

புத்தர் தியானம் கலைந்து கண் விழித்தார்.

புத்தரை வீழ்ந்து வணங்கினான். புத்தர் அவனிடம் " நீ யார் ? " என்று வினவினார்.

அவன் " என் பெயர் அபிநந்தன் " என்றான்.

புத்தர், " உனக்கு என்ன வேண்டும் ? " என்று கேட்டார்.

அபிநந்தன், " பெருமானே, நான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் உலகப் பற்றிலும், உலக வாழ்க்கையிலும் உழன்று ஏராளமான துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து விட்டேன். என்னை சந்நியாசியாக்கிப் பந்த பாசங்களிலிருந்து விடுவித்து ஞானம் அருளுங்கள். " என்றான்.

புத்தர் சிறிது யோசித்து அவனிடம், " அபிநந்தா இந்த மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. காரணம் என்ன தெரியுமா? காற்று இலைகள் மீது மோதுவதால் மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. மனித மனங்கள் இந்த இலைகளைப் போன்றவை. மனித மனங்கள் மீது உலகப் பற்று என்கிற காற்று வந்து மோதுகிறது. அதனால் மனங்கள் ஆடுகின்றன. அலைபாய்கின்றன. முதலில் உன் மனத்திலுள்ள பந்த பாசங்கள் அனைத்தையும் உன்னால் நீக்கிவிட முடியுமா? " என்று கேட்டார்.

அபிநந்தன், " புத்த பெருமானே , என்னால் பந்த பாசங்களைத் துறந்து விட முடியும் " என்றான்.

" சரி அப்படியானால் நீ இன்று முதல் போதி வனத்திலேயே தங்கலாம். " என்றார் புத்தர்.

சில நாட்கள் கடந்தன.

ஒரு நாள் புத்தர் அருகிலுள்ள குளத்திற்கு நீராடுவதற்காகச் சென்றார். அப்போது அவர் ஒரு மரத்தின் கீழ் , அபிநந்தன் பக்கத்தில் ஒரு நாய்க் குட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

புத்தர் அவனிடம், " அபிநந்தா, இது ஏது? " என வினவினார்.

அபிநந்தன், " பெருமானே, இது என் நாய்க்குட்டி. இது என்னை விட்டு அகல விரும்புவதே இல்லை. எப்போதும் என்னுடனேயே இருக்க விரும்புகிறது. ஆதலால் இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்." என்று கூறி இழுத்தான்.

புத்தர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.

மேலும் சில நாட்கள் கடந்தன. புத்தர் முன்பு போலவே நீராடச் சென்று கொண்டிருந்தார்.

இப்போதும் அபிநந்தன் அதே மரத்தடியில் நின்றிருந்தான். அவன் அருகில் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.

புத்தர் " அபிநந்தா, இந்தச் சிறுவன் யார் ? " எனக் கேட்டார்.

அபிநந்தன், " ஐயனே, இவன் என் மகன். இவன் இந்த நாய்க் குட்டியுடன் எப்போதும் இருக்க விரும்புகிறான். இவனால் இந்த நாய்க்குட்டியை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவனையும்..." என்றான்.

புத்தர் மீண்டும் சிரித்தவாறு அங்கிருந்து சென்றார்.

மேலும் சில நாட்கள் கடந்தன. அன்றைய தினம் புத்தர் நீராடக் குளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

குளத்தின் கரையிலிருந்த அதே மரத்தடியில் முன்பு போலவே அபிநந்தன் நின்று கொண்டிருந்தான். அவனருகில் நாய்க்குட்டி, சிறுவன் ஆகியவர்களுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தாள்.

புத்தர்," அபிநந்தா, யார் இந்தப் பெண் ? " என்றார்.

" பெருமானே, இவள் என் மனைவி. இவளால் இந்தச் சிறுவனை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவளும்..." என்று கூறி இழுத்தான்.

புத்தர் சிரித்துக் கொண்டே இரண்டு காலிப் பாத்திரங்களை எடுத்தார்.

" அபிநந்தா, இதோ பார் " என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு பாத்திரத்தில் கற்களைப் போட்டு நிரப்பினார். அதைக் குளத்து நீரில் விட்டார். அந்தப் பாத்திரம் குளத்தில் மூழ்கியது.

மற்றொரு காலிப் பாத்திரத்தைக் குளத்து நீரில் விட்டார். அது மிதந்து சென்றது.

" அபிநந்தா கனமான பாத்திரம் குளத்தில் மூழ்கி விட்டது. காலிப் பாத்திரம் குளத்தில் மிதந்து செல்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்த பாசம் எனும் உலகப் பற்று நிறைந்த பாத்திரம். அது பிறவித் துன்பங்கள் என்ற கடலில் மூழ்கிறது. காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது மூழ்காமல் மிதந்து செல்கிறது.

தலையிலிருந்து சில கேசங்கள் தாமாக உதிர்ந்து விடுகின்றன. அவ்விதம் உதிர விரும்பாத கேசங்கள், தலையில் இருந்து கொண்டே நரைத்து நம்மைக் கேலி செய்கின்றன. உதிர்ந்த கேசங்கள் ஓடி விடுகின்றன.

உலகப் பற்று இல்லாதவர்கள் உதிர்ந்த கேசங்களைப் போன்றவர்கள். பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டவர்கள் உதிர விரும்பாமல் தலையில் நரைத்து நம்மைக் கேலி செய்கிற கேசங்கள் போன்றவர்கள். விலக்க முடியாத பந்த பாசங்கள், உதிர விரும்பாத தலையில் உள்ள நரைத்த கேசங்கள் போன்றவை.

உனது மனம் உலகப் பற்றிற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கு விலையாக நீ உலகத் துன்பங்களையும், சித்ரவதைகளையும் அனுபவித்தேத் தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம், போய் வா " என்றார் புத்தர்.