செய்வினை என்பதும் நல்வினை என்பதும் ஆற்றல் களத்தில்(energy Field) ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களே...
செய்வினை செய்யக்கூடிய வல்லமை படைத்த மனிதன் தன்னுடைய மன ஆற்றல்களை அதிகப்படுத்திக் கொள்கின்றான். மன ஆற்றலை(Mind Energy) ஒரு குறிப்பிட்ட பொருளின்மீது குவித்து நொகை ஆற்றலாக(Negative Energy) மாற்றுகின்றான்.
மனிதனைச் சுற்றி 5 கோசங்கள் உள்ளன.
அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்
இதில் அன்னமய கோசமே மனிதனின் உடலுக்கு அருகே (ஏறக்குறைய நல்ல உடல் மன ஆரோக்கியம் கொண்டவர்களுக்கு 3 அடி வரை இருக்கும்.) உடலிலிருந்து வெளிப்புறத்தை நோக்கி எல்லா திசையை நோக்கியும் 3 அடி நீளம் வரை இருக்கும். இதை Aura என்றும் சொல்வார்கள். (விவேகானந்தரின் தலைக்குப் பின்னால் இருக்கும் ஒளிவட்டமே...!) இதனை 'Crealean' ஒளிக்கூடு(camera) மூலம் படம் பிடிக்க முடிகின்றது.
நோய் முதலில் இந்த சுற்றில்தான் ஆரம்பிக்கின்றது. அன்னமயகோசவில் துளை ஏற்படும்பொழுது சீவகாந்தமானது ஒழுகிக்கொண்டேயிருக்கின்றது. அது உடலில் மின் குறுக்கு ஏற்படுத்துகின்றது. இதனால் வலி உண்டாகின்றது... நீடித்த வலி உடலில் நோயாகப் பரிணமிக்கின்றது. இயற்கையே அந்தத் துளையினை அடைக்கும் பணியினை மேற்கொள்கின்றது. இயற்கையினால் முடியாதபொழுது சீவகாந்தத்தினை நாம் வேதியம்(chemical) மூலம் சமன் செய்யவேண்டியுள்ளது.
செய்வினையும் இப்படித்தான் வேலை செய்கின்றது. யார் மீது செய்வினை செய்யவேண்டுமோ அந்த நபரின் அன்னமய கோசத்துடன் தொடர்பு கொண்ட ஏதாவது ஒரு பொருளை(object) எடுத்துக்கொள்வார்கள்...
உதாரணமாக அந்த நபர் அணிந்த ஆடையின் ஒரு சிறு துண்டுப்பகுதி கூட போதும்; அல்லது நகம்; முடி; ஒரு பிடி கால் மண்... இப்படி அவருடன் தொடர்பு கொண்ட ஒரு பொருள்.
அதன்பின் 48 நாட்களுக்கு மிகவும் கடுமையான நியமங்களினை மேற்கொண்டு அந்த கருப்பு மந்திரவாதி(Black Magician) 'காச்மோரா' மந்திரத்தினைப் பாவிப்பார். இது மிகவும் வலிமைவாய்ந்த ஒரு மந்திரம். எதிரியை ஒழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டவர்கள் பாவிப்பது. எங்காவது பிழை ஏற்படினும் அந்த மந்திரவாதி காலி...! (உதாரணமாக அந்த 48 நாளும் அந்த மந்திரவாதி தன் ரத்தத்தினைப் பார்த்தல் கூடாது...நடு சாமம் கண்டிப்பாக பூசை...இப்படி அதிக நியமங்கள் உள்ளன... இது ஒரிசாவில் மிகவும் பிரபலம்...)
அந்த 48 நாட்களிலும் அன்னமய கோசத்தினை மெதுமெதுவே துளை செய்யப்படும். சில மந்திரவாதிகள் பொம்மை செய்து அதை ஊசியால்குத்தும் பொழுது இங்கே நமக்கும் அதே வலி உண்டாகும். மருத்துவ அறிவியலால் கண்டுபிடிக்க இயலாது. ஒரு சமயம் எல்லாம் சரியாக இருப்பதாக மருத்துவ பரிசோதனைகள் காட்டும்; அடுத்த நிமிடம் அப்படியே விந்தையான முடிவு(Abnormal result) வரும். மனோதத்துவ நிபுணர்கள் இதை வேறு வேறு பெயர்களை இட்டு குணப்படுத்த முயல்வார்கள்.
அதில் கருத்தேற்றம் செய்யும் முறை தினமும் மேற்கொள்ளப்படும் . மயக்கவுறக்க(hypnosis) முறை... இதுவும் அவ்வளவாகப் பலனளிப்பதில்லை...
தொடர் சீவகாந்த இழப்பினால் சொல்லொணாத் துயரங்கள் ஏற்படும். முதலில் உடல்நலம் பாதிக்கப்படும். பின்னர் மன நலம் பாதிக்கப்படும். இதனால் பொருள் வளம் பறிபோகும். இதனால் கவலையும் மன அழுத்தமும் வந்து சேரும். குடும்பத்தில் அனைவரும் ஒரு வித இறுக்கமான மனோ உணர்வினில் ஆழ்ந்திருப்பர். கவர்ச்சி நியதியின்படி(According to Law of Attraction) அவர்கள் தங்களை அறியாமலேயே தங்களது மனதினில் நொகைகளை(Negatives) வளர்த்துக் கொண்டிருப்பர்.
அவர்களே இப்பொழுது நம்பிக்கை இன்றி வாழ்வின் கடைசிக் கட்டத்தினை
எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர்....
மருத்துவம் பலனின்றி வெகுவிரைவிலேயே இன்ன காரணமென்றும்
கண்டுபிடிக்கப்படமுடியாமலேயே வாழ்வும் ஒரு முடிவிற்கு வந்துவிடுகின்றது....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment