Saturday, October 10, 2009

குறை நீ சந்தித்த குருமார்களிடம்அல்ல

ஆனந்தனுக்கு ஆன்மீக தாகம் அதிகமாகவே இருந்தது.தனக்கு ஒரு குரு வேண்டி பல இடங்களில் அலைந்தான்.

பல ஆசிரமங்களுக்கு சென்றான் ஆனால்அங்கிருப்பவர்களுக்கும் இவனுக்கும் ஒத்து வரவில்லை.அதிக பட்சம் சில நாட்கள் மட்டுமே அவனால் அங்கிருக்கமுடியும். அதற்குள் மன ரீதியாக வித்தியாசம் ஏற்பட்டுவெளியேறி விடுவான்.

தனக்கு ஆன்மீக குரு கிடைப்பார் என்ற நம்பிக்கையேஆனந்துனுக்கு போய்விட்டது. அந்த சமயம் நண்பன் ஒருமுனிவரை பற்றி சொன்னான். கடைசியாக முயற்சி செய்யஆனந்து புறப்பட்டான்.

அங்கு முனிவர் சந்தமாக நிஷ்டையில் இருப்பார் எனபார்த்தல் அவர் தோட்டத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு முன்பு சென்று சாஷ்டாங்கமாக விழுந்துவணங்கினான். தனக்கு எங்கும் சரியான குரு கிடைக்காததனது நிலையை சொல்லி வருந்தினான்.

ஒரு புறம் இதை கேட்டு கொண்டே தோட்டத்தில்களைகளை பறித்து கொண்டிருந்தார் முனிவர்.

தோட்டத்து கிணற்றுக்கு அருகில் ஆனந்தனை அழைத்துவந்து, ஒரு வாளியை கொடுத்து தண்ணீர் இரைக்கசொன்னார்.

பின்பு அவர் தனது களை பறிக்கும் வேலையை பார்க்கசென்றுவிட்டார்.
தண்ணீர் எடுக்க முயற்சித்தாலும் வாளியில் தண்ணீர்நிரம்பாததை உணர்த்த ஆனந்த்தான், வாளியைகிணற்றிலிருந்து வெளியே எடுத்து பார்த்தான். வாளியின்கீழ் புறத்தில் பெரிய ஓட்டை ஒன்று இருந்ததைஉணர்ந்தான்.

நேரே முனிவரிடம் வந்து, "குருவே... ஓட்டை வாளியைகொடுத்தால் நீர் எப்படி இரைப்பது?" என கேட்டான்ஆனந்தன்.

மெல்லிய புன்னகையுடன் முனிவர் அருகில் வந்து...அந்தவாளியை வங்கி கொண்டார். பின்பு தொடர்ந்தார்," ...ஆனந்தா , இங்கு அல்ல எங்கு தேடினாலும் உனது குருகிடைக்க மாட்டார். குறை நீ சந்தித்த குருமார்களிடம்அல்ல உன்னிடம் தான். குருவை அடையவேண்டியவர்கள்முதலில் கிழ்படியும் தன்மையை வளர்த்து கொள்ளவேண்டும்.
வாளியில் உள்ள ஓடையை கண்டவுடன்...உனதுபுத்திசாலித்தனம் வேலை செய்ததே தவிர , குருவை பற்றிநீ சிந்திக்கவில்லை.
குருவின் செயலில் எதாவது ஒரு அர்த்தம் இருக்கம் என நீசெயல்பட்டிருந்தால் உனக்கு எப்பொழுதோ குரு கிடைத்துஇருப்பார்.... உனது குருவின் தேடலை மீண்டும்தொடரு...எனது ஆசிர்வாதங்கள் ...


ஆனந்தனின் மனதில் இருந்த அறியாமை இருள்விலகியது....புதிய ஒளியுடன் புறப்பட்டான்...

............................................................................................................................

பணம் பொருளை தேடும் உலகம் இது. இதில்...
இருள் விளக்கும் குருவை தேடி யார் போவர்கள்?

கீழ்படிதல் எனும் ஒரு குணம் மட்டுமே சிலரை முக்தியடைய உதவிய வரலாறு உண்டு. வைணவ மரபில் கீழ்படிதல் என்பது இயல்பான ஒரு குணம்.

கீழ்படிதல் எனும் குணத்தை வளர்க்க முடியாது. அதுவே நமது சுய நிலை. ஆணவம் அகன்றால் எஞ்சி இருப்பது கீழ்படிதல் மட்டுமே.

No comments:

Post a Comment